தமிழகத்தில் தென் கடலோரப் பகுதிகளில் 6-ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 ,5 ஆகிய இரு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், 6-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், 7 ,8 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்த கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.