Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்…. உறுதியளித்த அமைச்சர் மூர்த்தி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு விதிகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |