Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா….? ஆலோசனை நடத்தும் அமைச்சர்…. வெளியான தகவல்….!!!!

ஜல்லிக்கட்டு குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போட்டி  நடைபெறும். அதிலும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இதனை பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டை  அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து வருகின்ற 22 -ஆம் தேதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

Categories

Tech |