தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மே 24ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முழு ஊரடங்கு நீட்டிப்பதா? அல்லது அதில் தளர்வுகளை அறிவிப்பதா என்பது குறித்து நாளை ஆலோசனை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மே மாத இறுதி வரை அல்லது ஜூன் மாதம் முதல் வாரம் வரையிலும் முழு ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.