Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்டது. இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்கு மாணவர்களை இ-பாஸ் முறையில் அழைத்து வருவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கு விவரம் :

இந்த நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறியும், மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசுக்கு கேள்வி :

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் 10ம் வகுப்பு தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்?, தேர்வினை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கலாமே? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பினர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும், முடிவெடுக்காவிட்டால் தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்று அதிரடியாக கூறியுள்ளனர். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலையில் நடத்தலாமா? என்பது குறித்து இன்று பிற்பகல் 2.20க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். பொதுத்தேர்வு வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |