தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த இறுதி நாள் மே 10 முதல் ஜூன் 7 வரை உள்ள நுகர்வோர், ஜூன் 15ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் தாழ்வழுத்த மின் நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு மின் நுகர்வோருக்கு மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணம் இன்றி ஜூன் 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.