நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட எழும்பூரில் இருந்து புறப்படும் செந்தூர், தேஜஸ், மன்னார்குடி, சோழன் மற்றும் ராமேஸ்வரம் உட்பட முக்கிய ரயில்களின் சேவை ஜூன் 16-ஆம் தேதி முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் திருச்செந்தூர், கன்னியாகுமரி, மன்னார்குடி, கொல்லம் மற்றும் குருவாயூர் உட்பட 47 விரைவு ரயில்களின் பயண நேரத்தை மாற்றி வெளியிட்டுள்ளது.