தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதியளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆம்னி பேருந்துகள் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக மொத்தம் உள்ள 4000- க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உள்ளது. இருப்பினும் நேற்று ஒரு சில பேருந்துகள் இயக்கப் பட்ட நிலையில் ஜூலை மாதம் முதல் முழு வீச்சில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.