Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 17 வரை கனமழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை 17 வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யலாம். தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 17-ஆம் தேதி நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |