தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை 21-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் உட்பட 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.