பொது முடக்கத்தை பொறுத்தவரை பார்த்தோம் என்றால் கடந்த மார்ச் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் சுமார் ஆறு முறை பொது முடக்கம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதனை மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 14 வரையும், அதன் பிறகு மே 3 வரையும், பிறகு மே 17ஆம் தேதி வரையும்,
பிறகு ஜூன் ஒன்றாம் தேதி என 5முறை நீட்டிக்கப்பட்டு, இறுதியாக ஒரு மாதம் என ஜூன் ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது.
கொரோனா தொற்று அதிகமாக இருக்கக்கூடிய மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீடித்துள்ள நிலையில் தமிழக அரசும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது.