Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதிக்குள்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியீட்டுள்ளது.

அதன்படி 10ஆம் வகுப்பு மதிப்பெண் விலை 50 சதவீதம்,11 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 20 சதவீதம், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30% மதிப்பெண்களின் சராசரி கொண்டு கணக்கிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் குறைவான உள்ளிட்ட காரணங்களால் செய்முறை தேர்வில் பங்கேற்று மாணவர்களுக்கு பிளஸ் 1 செய்முறை தேர்வு மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண் குறைவு என்று கருதினால் மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும். கொரோனா தொற்று காலம் முடிந்த பிறகு தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுடன், தனித்தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தேர்வுத்துறை இணையதளத்தில் மதிப்பெண் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |