Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு….? வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டாஸ்மாக் பார்களுக்கு உடனடியாக டெண்டர் நடத்தாவிட்டால் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்த இருப்பதாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை அரசு எடுத்து நடத்தினாலும் பார்கள் தனியாருக்குதான் ஏலம் விடப்படுகின்றன. அதில் அவ்வப்போது ஏலம் நடத்தப்படுவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து  டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில், அரசுக்கு வருவாய் என்பது ஒரு மாதத்திற்கு சென்னையில் மண்டலத்தில் ஆறு மாவட்டத்தில் மட்டும் 11 கோடி ரூபாய் வருவாய் இழப்பு.

மூன்று மாத காலமாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நிர்வாகம் இதுவரை சரியான முடிவு எடுத்து டெண்டர் அறிவிக்கவில்லை. உடனடியாக பார்களுக்கு டெண்டர் வழங்க வேண்டும் என்று நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம். டெண்டர் விடவில்லை என்றால் டாஸ்மாக் கடைகளை எல்லாம் காலி செய்யச் செய்து நிர்வாகத்திடம் போராட வேண்டிய சூழலில் கொண்டு வந்து விடுகிறார்கள். இந்த மூன்று மாத காலகட்டத்தில் இது முடியவில்லை என்றால் அடுத்த கட்டமாக டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |