Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்?…. முக்கிய செய்தி….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி சமூக ஆர்வலர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா மூன்றாவது அலையாக உருவாகாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக, இப்போதே டாஸ்மாக் கடைகளை மூடினால் பெரும் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |