தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கும் அரசு ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது. கோவில்களில் 3 நாள் தடை. ஓட்டல்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கூடும் கூட்டத்தால் பரவாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.