Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கடும் எதிர்ப்பு?…. அரசு அளித்த விளக்கம்….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே கிராம சபைகளும், கிராம பஞ்சாயத்துகளும் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றினால் அதனை செயல்படுத்துவது தொடர்பான விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு, நீதிபதி கார்த்திகேயன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறினார். மேலும் திருத்த விதிகளையும் தாக்கல் செய்தார். அதோடு மட்டுமில்லாமல் இந்த திருத்த விதிகளில் ஆட்சேபங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அந்த கடைகளை திறக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல் முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை மீண்டும் சம்பந்தப்பட்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அதோடு மட்டுமில்லாமல் முழு அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட கேள்வியை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

இதற்கு முன்னதாக நடந்த விசாரணையின் போது குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில் ராஜஸ்தான், பஞ்சாப் மாநில எல்லைகள் மூலமாக மதுபானங்கள் அங்கு கொண்டு செல்லப்படுவதாக நீதிபதிகள் கூறினர். அதேபோல் ஒரு கிராமத்தில் டாஸ்மாக் கடைகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் குடிமக்கள் அருகில் உள்ள கிராம கடைகளுக்கு செல்வர். எனவே கிராம பஞ்சாயத்துக்கள் அல்லது கிராம சபை தீர்மானத்தின் மீது எந்த பயனும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |