Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக், மதுக்கடைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முக்கிய அரசு விடுமுறை களின்போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபி யே முன்னிட்டு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அரசு அறிவித்துள்ளது. இன்றைய நாளில் மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடங்கள்,இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், பார்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.அரசின் இந்த திடீர் அறிவிப்பு மதுப் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |