Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்படாததால், தேர்வு அறிவிப்பாணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பாணை  வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |