தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி ஒன்றியத்தில் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி சித்தூரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்பி கதிர் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேசிய நீர்வளத்துறை அமைச்சர், தமிழகத்தில் ஊராட்சி தேர்தல் முடிந்தவுடன் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் அரசு பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கவுன்சிலர் என்பதால் அவர்கள் பணியை சிறப்பாக செய்து வர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.