தமிழகத்தில் டிசம்பர் 1ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி வரை மழை நீடிக்கும். சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிக அதிகமான மழை பெய்யும். குமரி கடல், தெற்கு வங்கக் கடல் மற்றும் தென் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.