தேனி மாவட்டத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் ஆகியவை சேர்ந்து வரும் 19-ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த விருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மக்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதமாக அரசு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் தனியார் துறைகள் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
கடந்த -2020 ஆம் ஆண்டு தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று குறைந்து தற்போது இயல்பு நிலைக்கு வந்ததால், மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்தநிலையில், அரசு தளர்வுகளின் ஒரு பகுதியை தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் தவறாது நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து வரும் டிசம்பர் 19-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள அரசு ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் ஆகியவை இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்ள நினைப்பவர் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்வி சான்றிதழ்களின் நகலை போன்றவற்றை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். மேலும் வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு thenideojobmela@ gmail. Com அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண், 04546 254510 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டுக் கொள்ளலாம் என்று, அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.