தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தொற்று பரவல் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உருமாறிய ஒமைக்ரான் புதிதாக கொரோனாவின் மூன்றாவது அலையாக பரவ தொடங்கியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஜனவரி மாதம் 2021 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவிவரும் உருமாறிய கொரோனா தொற்றால் ஏற்படும் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும் தலைமைச்செயலகத்தல் முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும், பொதுமக்கள் நலன் கருதியும், நடைமுறையிலுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இந்த மாதம் இறுதி வரை நீட்டித்து ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஏராளமானோர் கூடுவதால், நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் பொதுமக்கள் நலன்கருதி கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்றால்,
சமுதாய கலாச்சார அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, டிசம்பர் மாதம்-31 ஆம் தேதி மற்றும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி 2021 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் அதற்குரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
மேலும் பின்வரும் செயல்பாடுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
நீச்சல் குளங்கள் அனைத்தும் செயல்பட அனுமதிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
அதில் முக்கியமாக, தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக, பல மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாததால் அவர்களின் கற்றல் திறன் குறைந்து உள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், 2022- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ஆம் தேதி முதல் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் அதாவது,6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மட்டும் அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சிமுறை இன்றி வழக்கம் போல் செயல்படும்.
பொது
கடைகளில் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் விதமாக சானிடைசர் கட்டாயம் வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
அனைத்து கடைகளிலும் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் ஒரே நேரத்தில் ஏராளமான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
கடைகளில் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் போது கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் குறியீடுகள் போடப்படவேண்டும். இவ்வாறு தமிழக அரசு ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளது.