Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிரைவிங் பள்ளிகள் வேலை நிறுத்தம்….. எதற்காக தெரியுமா?….. பெரும் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயில்வோரை வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் மற்ற நாட்களில் இதர விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுனர் தேர்வு நடத்த வேண்டும் என்றும் போக்குவரத்து துறை ஆணையர் சமீபத்தில் உத்தரவிட்டார். உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டம் உறுப்பினர் நேற்று முதல் வட்டார போக்குவரத்து அலுவலங்களில் நடைபெறும் ஓட்டுநர், பழகுநர் தேர்வை புறக்கணித்துள்ளனர். இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் ஆர்.முரளிதரன், செயலர் வைகை ஆர்.குமார் கூறியது, பொதுமக்களுக்கு வாரத்தில் 3 நாட்களும், ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயில்வருக்கு 2 நாட்களும் ஓட்டுநர் தேர்வு நடத்த வேண்டும் என்று போக்குத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து எங்களிடம் பயிற்சி பெறுவோரும் பொதுமக்கள் தானே, பிறகு ஏன் இந்த பாகுபாடு என தெரியவில்லைம் இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி ஓட்டுனர், பழகுநர் உரிம தேர்வுகளை மட்டும் புறக்கணித்துள்ளோம். தமிழக முழுவதும் உள்ள 2,500 க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் 99% பள்ளிகள் உரிமம் பெறுவதற்கான தேர்வுக்கு விண்ணப்பத்தார்களை அழைத்துச் செல்லவில்லை. இது குறித்து பொதுமக்களுக்கு விளக்கினோம். அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர். உத்தரவை திரும்பப்பெறும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் டிரைவிங் பள்ளிகள் மூலம் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |