தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.8.69, டீசல் விலை ரூ.8.75 அதிகரித்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசை நாங்கள் நம்பவில்லை, டீசல் விலையை 4 ரூபாய் குறைத்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. அதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கோரிக்கையை முதல்வர் விரைவில் பரிசீலனை செய்து முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Categories