வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 97 நபர்களுக்கு எஸ் ஜீன் டிராப் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலும் ஒமிக்ரான் வைரஸ் 34 பேரை பாதித்துள்ளது. இதில் 16 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் “டேட்டோ செல்” என்ற செயலியை தொடங்கி வைத்தார். அதாவது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சார்பாக இந்த சிறப்பு செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே மருத்துவமனையில் உள்ள நிலவரங்களை இந்த செல் டேட்டா ஆப் மூலம் அறிய முடியும்.