தமிழகத்தில் தேர்தல் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது “திருமங்கலம் பார்முலா” தான். அந்த பார்முலாவை ஆர்.கே.நகர் தேர்தலில் ரூபாய் 20 டோக்கன் கொடுத்து டிடிவி காலி செய்துவிட்டார் என்று பரவலாக ஒரு பேச்சு இருக்கிறது. இந்த இரண்டு பார்முலாவையும் தூக்கி சாப்பிடும் அடிப்படையில் தற்போது தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணம், புடவை, அண்டா, குண்டா என்று அனைத்திற்கும் டோக்கன் பார்முலாவை திமுக-அதிமுக கையில் எடுத்து இருப்பதாக மக்கள் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.
Categories