Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ட்ரெண்டிங் இதுதான்….. “6.59க்கு ஸ்டாலின், 7.20க்கு சீமான், 7.28க்கு அண்ணாமலை”….. அப்படிப்போடு…..!!!!!

தமிழகத்தில் ட்விட்டரில் ஒரு வார்த்தையில் ட்விட் போடுவது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. அதன்படி அரசியல் கட்சி பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் தங்களுக்கு பிடித்த பெயர்களை பதிவிட்டு வருகின்றனர். அவ்வகையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், திராவிடம் என்று குறிப்பிட்டுள்ளார்.இதனை கண்ட திமுக தொண்டர்கள் பலரும் தங்கள் ட்விட்டரில் திராவிடம் என்று வார்த்தையை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது திராவிடம், தமிழ் தேசியம், இந்துத்துவமாகிய மூன்று இசங்கள் தான் அரசியலில் முட்டி மோதிக் கொள்கின்றன. அதனைப் போலவே ஒற்றை வார்த்தை டுவிட்டிலும் அடித்துக் கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் 6.49 மணிக்கு “திராவிடம்” என பதிவிட, அடுத்த 20 நிமிடத்தில் 7:20 மணிக்கு “தமிழ் தேசியம்” என சீமான் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். இருவரும் அப்படி அடித்துக் கொள்ள கேப்பில் கிடா வெட்டிய அண்ணாமலை 7.28 மணிக்கு “தமிழன்” என பதிவிட்டு இருவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

Categories

Tech |