கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த வைரஸ் காரணமாக தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் காய்ச்சல் இல்லை. எனவே மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.