Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிக்கல்…. சுகாதாரத்துறை தகவல்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு குறைவாக உள்ளதாகவும், அதனால் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.ஏற்கனவே ஜூன் 5ஆம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |