Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி…. முடங்கும் ஆபத்து – வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000 நெருங்கியுள்ளது.  இதனால் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் தடுப்பூசி போடுவதால் மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமான தடுப்பூசிகள் இருப்பு கைவசம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய 20 லட்சம் பெறுவதிலும் பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணி முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |