தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மெகா தடுப்பூசி முகாம்களை ஒவ்வொரு வாரமும் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது.இதனிடையே அக்டோபர் மாதத்திற்கு பிறகு தடுப்பூசி முறையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர்,பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் கூட தாண்டவில்லை அடுத்த மாதம் முதல் பூஸ்டர் இலவசமாக போட முடியுமா என்பது ஒன்று அரசு தான் கூற வேண்டும்.
நாட்டின் 75வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் செப்டம்பர் மாதம் இறுதி உடன் அந்த 75 நாட்கள் முடிவடைகிறது.கொரோனா தடுப்பூசியோடு சேர்த்து 13 வகையான தடுப்பூசி அக்டோபர் மாதம் முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.