Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

ஆப்பிரிக்காவில் காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் 66 குழந்தைகள் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த Maiden Pharmaceuticals Limited தயாரித்த இருமல் மருந்தை சாப்பிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் குரோம் மெத்தஸைன், பேபி கார்ப் சிரப் உள்ளிட் நான்கு இருமல் மற்றும் சளி மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் தடை செய்யப்பட்ட மருந்தை தயாரித்த நிறுவனத்திடம் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் வாங்குவது இல்லை. இருமல் மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |