தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்பதி இல்லாத மாணவர்களுக்கு விருப்பத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி அந்த தேர்வு ஆகஸ்ட-6 தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்படும்.
தேர்வு எழுத விரும்புபவர்கள் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை மாவட்டங்களிலுள்ள தேர்வுத் துறை உதவி இயக்குனரகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விருப்ப தேர்வு எழுதும் மாணவர்கள் அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.