Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் துறைகள் பங்கேற்க உள்ளது. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித்தகுதிகள் உடையவர்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். நேர்காணலுக்கு வருவோர் தங்களின் சுய விபரக்குறிப்பு, கல்வி சான்றிதழ்,ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.இந்த வேலை வாய்ப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |