தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விளக்கு அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் நேராக கொரோனா பரவி வரும் நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதில் பல மாணவர்கள் பெற்றோரை இழந்தனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் படிப்பது உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான கருத்துருவை தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.