Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் மயமாகும் அரசுப்பேருந்துகள்….? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழக அரசு போக்குவரத்து துறையை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தனியார் மயமாக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக சென்னையில் ஆயிரம் பேருந்துகள் இயக்கத்தை தனியாரிடம் விடத் திட்டம் உள்ளதாகவும், படிப்படியாக தமிழக முழுவதும் 25 சதவீதம் போக்குவரத்து தனியார் மயம் ஆக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து போக்குவரத்து கழக வட்டாரங்கள் கூறுகையில், தமிழகத்தில் இலவச பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளால் போக்குவரத்து கழகங்கள் வருடத்திற்கு 42 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. தற்போது நிலவி வரும் கடுமையான நிதி சுமையால் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் தமிழக அரசு தடுமாறுகிறது. சட்டபேரவையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை முடிவடைந்த நிலையில் நிதியமைச்சர் தியாகராஜன் போக்குவரத்து கழகங்களை சீரமைப்பது குறித்து பேசினார்.

அப்போது போக்குவரத்து துறையை தனியார்மயமாக்க அரசு கொள்கை முடிவு எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த பணியில் அரசு தற்போது தீவிரமாகி உள்ளது. முதல் கட்டமாக சென்னையில் ஆயிரம் பேருந்துகளை இயக்க தனியாரை அனுமதிக்க ஏற்பாடு நடக்கிறது. படிப்படியாக தமிழக முழுவதும் 25 சதவீதம் போக்குவரத்து தனியார் மயமாக ஆக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |