மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதாவது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சந்தித்தார்.
அதன்பிறகு பேசிய அவர், அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கட்டண நிர்ணய குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.