வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
சென்னையிலுள்ள வடபழனியில் தனியார் ஸ்கேன் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தனியாருக்குச் சொந்தமான ஸ்கேன் மையங்களில் அதிரடி சோதனையை வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் தொடங்கியுள்ளனர்.
இந்த சோதனையானது வடபழனி, பாடி, மடிப்பாக்கம், வேளச்சேரி, நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. மேலும் ஸ்கேன் நிறுவனங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட இருக்கிறது.