தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுக கட்சியினரும், திமுகவினரும் மாறிமாறி குறைகூறிக்கொண்டு விமர்சித்து வருகின்றனர். மேலும் நேரடியாக மக்களிடம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்க செய்வோம். மேலும் லஞ்சம் எதுவுமில்லாமல் பணிவாய்ப்புகள் வெளிப்படையாக வழங்கப்படும் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து ஏராளமான வேலைவாய்ப்புகள் திமுக ஆட்சியில் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.