தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை தேர்தல் ஆணையம் தற்போது வரை வெளியிடவில்லை.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு 92,300வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் கட்ட சோதனைகள் நிறைவடையும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசியல் கட்சிகளைப் போலவே தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.