Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்!…. அரசு எடுக்கும் அதிரடி முடிவு….?!!!!

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் 2,760 பேருக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவதற்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1990-2019 கல்வியாண்டு காலகட்டத்தில் 300 தலைமையாசிரியர்கள், 2,460 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 2,760 தற்காலிக பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன. இவர்களின் பணிக்காலம் டிசம்பருடன் முடிவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

பள்ளிக்கல்வி ஆணையர் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்குவதற்கான அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு ஏப்ரல் மாத ஊதியத்தை 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கும் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுவதாக அனைத்து மாவட்டக் கருவூலக அலுவலகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா தெரிவித்துள்ளார். எனவே சம்பள பட்டியல் தாக்கல் செய்யும்போது தற்காலிக ஆசிரியர்கள் 2,760 பேருக்கும் ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |