கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எப்போது கொரோனா குறைந்து உயர்கல்வி செல்வோம் ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் பெற்றோர்களும் தங்களது மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஆங்காங்கே அட்மிஷன் நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையனிடம் தமிழ அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் தற்போதைக்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை என்றும், மதிப்பெண் மதிப்பெண் விளம்பரப்படுத்தி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.