Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு?…. அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இதில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை, டீ கடைகளுக்கு தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாதிப்பு குறையாத மாவட்டங்களில் தளர்வுகள் இன்றி  ஊரடங்கு தொடரும் என தெரிகிறது.

Categories

Tech |