Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…. மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரங்கு தளர்வு, கட்டுப்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையை கருத்தில் கொண்டே அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |