விரைவில் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம் என அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் காரை நேரு நகர் பகுதியில் உள்ள சையத் சாதுக்ஷா அவினியான் தர்காவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் தொழுகை நடைபெற்றுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக வக்குவாரிய முன்னாள் தலைவரும் அதிமுக அவை தலைவருமான தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தர்காவில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகத்தில் திமுக அரசை விரைவில் வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம் எனவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வென்று விடுவார் என்றும் கூறியுள்ளார்.