Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுமா?… முதல்வரை சந்திக்க செல்லும்… திரையரங்கு உரிமையாளர்கள்…!!!

திரையரங்குகளை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்குமாறு முதல்வரை சந்தித்து நேரில் கோரிக்கை விடுக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.பல்வேறு மாநிலங்கள் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் தமிழக அரசு தற்போது வரை எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி திரையரங்க உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய பிறகு திரையரங்குகளை திறப்பது பற்றி முடிவு செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

இந்த நிலையில் திரையரங்குகளுக்கு வரும் அனைவருக்கும் இலவச முகக்கவசம் வழங்குவோம், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்புவோம், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதி செய்து கொடுப்போம், சமூக இடைவெளியை பின்பற்றுவோம் போன்ற பல்வேறு முடிவுகளுடன் முதல்வரை சந்திப்பதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்குமாறு அவரிடம் கோரிக்கை வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Categories

Tech |