நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவி வருவதை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பொது இடங்களில் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசாங்கங்கள் மக்கள் கூடுகின்ற திரையரங்கம், கேளிக்கைகள் போன்றவற்றுக்குத் தடை விதித்துள்ளன.இதனிடையே கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு இதுகுறித்து பதிலளித்தார். வெளிநாடுகளைப் போல இடைவெளிவிட்டு படம் பார்த்தால் உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது. தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை. கொரோனா பாதிப்பு சூழ்நிலையை பொறுத்து திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.