தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் திரையரங்குகளை மூடுவதற்கு உரிமையாளர்களே முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் கொரோணா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டால் மக்கள் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் பல திரையரங்குகளை உரிமையாளர்களே மூடியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா அதிகரித்துவரும் காரணத்தால், மக்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது என்று உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த மாதம் வெளியாவதாக இருந்த படங்களில் வெளியீடு தள்ளிப் போவது குறிப்பிடத்தக்கது.