Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்குகள் தொடர்ந்து இயங்கும்…. வெளியான அதிரடி உத்தரவு..!!

தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் திரையரங்குகள் தொடர்ந்து இயக்கப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையுடன் இணைந்து ஆலோசனை நடத்தி தமிழகத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது. மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டது. இதில் திரையரங்குகள் மால்கள் ஆகியவை இயங்காது என்றும் அறிவித்தது.

இதையடுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இணைந்து காணொளிகள் மூலம் ஆலோசனை நடத்தினர். அதில் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை தொடர்ந்து இயக்க உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் புதிய அரசு அமைந்தவுடன் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |