தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அறிவிக்க தொடங்கியது. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 110 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள திரையரங்குகளை திறக்க பரிந்துரை செய்ய அமைச்சர் மா. சுப்பிரமணியனை, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.திரையரங்குகளை திறக்க அனுமதி கிடைத்தால் அரசின் விதிமுறைகளை பின்பற்ற தயார் எனவும் உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தின் திரையரங்குகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.